சும்மா இருக்கும் தங்கத்தில் எப்படி வருமானம் பெறுவது? சூப்பர் ஐடியா!

சும்மா இருக்கும் தங்கம் மற்றும் நகையை வைத்து வருமானம் ஈட்ட சூப்பர் ஐடியா.

ஹைலைட்ஸ்:

Gold Monetisation

தங்கத்தில் முதலீடு செய்யவும், பணம் ஈட்டவும் நிறைய வழிகள் உள்ளன. ஆன்லைனிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்; நேரடியாகவும் தங்க நகை அல்லது நாணயம் போன்ற வடிவில் நிஜத் தங்கமாக வாங்கி முதலீடு செய்யலாம்.

எனினும், நகை போன்ற நிஜத் தங்கத்தை சேமித்து வைப்பதில் சிக்கல்கள் இருக்கிறது. வங்கி லாக்கர்களில் நகையை சேமிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஆக, சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து எப்படி வருமானம் ஈட்டுவது?

இதற்காகவே ரிசர்வ் வங்கி தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை (Gold Monetisation Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தங்கத்தை டெபாசிட் செய்து வட்டி மூலம் வருமானம் பெறலாம். பயன்படாமல் இருக்கும் நகை மற்றும் இதர தங்கச் சொத்துகளை டெபாசிட் செய்து வருமானம் ஈட்டலாம்.


உங்ககிட்ட 2 ரூபாய் இருக்கா? 5 லட்சம் கிடைக்கும் தெரியுமா?
* தங்க நகை, தங்க நாணயங்கள், தங்கக் கட்டி போன்றவற்றை இத்திட்டத்தில் டெபாசிட் செய்யலாம்.

* குறைந்தபட்சம் 10 கிராம் தங்கமாவது டெபாசிட் செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை.

* 1 முதல் 15 ஆண்டுகள் வரை முதலீட்டாளர் தமக்கு விருப்பமான காலகட்டத்தை தேர்வு செய்து தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.